Sunday 5th of May 2024 02:09:11 AM GMT

LANGUAGE - TAMIL
.
நடிகர் விவேக் காலமானார்!

நடிகர் விவேக் காலமானார்!


தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் கதைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமுற்று நினைவிழந்த நிலைக்கு சென்றிருந்தார்.

இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நடிகர் விவேக் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்து வந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நடிகர் விவேக்கின் மறைவுக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தபோதிலும் அவருடைய மறைவுக்கு தடுப்பூசி காரணமில்லை என்று வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE